ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு டி20 தொடர் நியூசிலாந்தில் நடந்துவருகிறது த்தொடரின் 5 போட்டியில் நியூசிலாந்துஆஸ்திரேலியா அணிகள் மோதின இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணிமார்டின் கப்டிலின் அபார சதத்தால் 243 ரன்களை குவித்தது.
20 ஓவரில் 244 என்ற கடின இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, அபாரமாக ஆடி 18 5 ஓவரிலேயே இலக்கை எட்டியது சர்வதேச டி20 போட்டியில் வெற்றிகரமாக சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுதான்.
இந்த போட்டியில், சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று நடந்தது. நியூசிலாந்து அணியின் பேட்டிங்கின்போது 18வது ஓவரை பில்லி ஸ்டேன்லேக் வீசினார் அந்த ஓவரின் 5வது பந்தை நியூசிலாந்தின் மார்க் சேப்மேன் எதிர்கொண்டார் பவுன்சராக வந்த அந்த பந்து சேப்மேனின் ஹெல்மெட்டில் அடித்து ஹெல்மெட் ஸ்டம்பில் விழுந்தது இதனால் சேப்மேன் அவுட்டானார்.
இப்படியாக ஹிட் விக்கெட் முறையில் இதற்கு முன்னதாக நியூசிலாந்தில் ஆடம் பரோன் மற்றும் இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சன் மட்டுமே அவுட்டாகியுள்ளனர் அந்த வரிசையில் தற்போது சேப்மேனும் இணைந்துள்ளார்.
Comments
Post a Comment